கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே மாலை 6 மணி வரைசேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரியில் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது, ஒரு கடைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025