அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி– முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
- முருங்கைக்காய் =3
- வெங்காயம்=2
- தக்காளி =2
- சீரகம்=1 ஸ்பூன்
- எண்ணெய் =4 ஸ்பூன்
- பச்சைமிளகாய் =2
- கரம் மசாலா =1 ஸ்பூன்
- மிளகாய் தூள் =1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
- மல்லி =1 ஸ்பூன்
- ஏலக்காய் =1
- கிராம்பு =2
- பட்டை =2
- சோம்பு=1ஸ்பூன்
- கசகசா =1ஸ்பூன்
- தேங்காய் =1 துண்டு
- வேர்க்கடலை =2ஸ்பூன்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, மல்லி, பட்டை , ஏலக்காய், கிராம்பு சோம்பு , கசகசா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அதனுடன் ஒரு துண்டு தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 4 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து சீரகம் பொரிந்ததும் இரண்டு பெரிய வெங்காயம் சிறியதாக நறுக்கியது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இரண்டு அரைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .அதனுடன் முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு ஐந்து நிமிடம் கழித்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் மசாலாவுடன் முருங்கைக்காயை கலந்து விடவும் பின்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் கிரேவி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025