இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைவரும் உடனடியாக டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக, ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், ஈரான் அணுசக்தி […]
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகிறது. இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் இன்று நடத்தப்படும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் […]
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. […]
இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அமெரிக்காவின் பங்கு குறித்து, டிரம்ப் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்குவதாக ஈரான் […]
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் ஒரு […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பல ஈரானிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் பல அணு ஆயுத இலக்குகளும் அடங்கும். இந்த விமானத் தாக்குதலில் முக்கியமான 20 ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பிற்பகலில் இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுத்தது. ஈரான் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இஸ்ரேலிய […]
இஸ்ரேல் : இஸ்ரேல் – ஈரான் இடையே பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 329 பேர் காயமடைந்துள்ளனர். நள்ளிரவுக்கு பின் வான் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியது. ஈரானின் அணு ஆயத திட்டங்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில் ஈரானின் IRGC […]
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இன்று “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு […]
அமெரிக்கா : ரியாக்சன் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான யூடுயூபர்களில் ஒருவர் ‘ஐ ஷோ ஸ்பீடு’. இவர் ரன்னிங் ரேஸிலும் சிறப்பாக ஓடக்கூடிய ஒருவர் என்பது அவரை பின்தொடர்ப்போருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரை யூடியூப்பில் மட்டும் 40 மில்லியனிற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவரை போலவே காலையில் சீக்கிரம் எழுந்து ஐஸ் வாட்டரில் முகம் கழுவும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் Ashton Hall (ஆஷ்டன் ஹால்). இவருக்கும் யூடியூப்பில் 3 மில்லியனிற்கும் […]
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளான துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை இலக்கு வைக்கப்பட்டன. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை ஈரானின் அணுசக்தி ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்காகவும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் […]
வாஷிங்டன் : ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2330 GMT) தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய […]
இஸ்ரேல் : ஈரான் மீது, இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை முதல் பெரிய அளவிலான தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க தனது விமானப்படை தெஹ்ரானில் குண்டுவீசியதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திருக்கிறது. இதனால் ஈரானில் பல இடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இந்த தாக்குதலால் மத்திய […]
பூக்கெத் : தாய்லாந்தில் இருந்து புது டெல்லிக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, ஃபூகெட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புது டெல்லியை நோக்கி புறப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தாய்லாந்து விமான […]
இஸ்ரேல் : இஸ்ரேல் இன்று (ஜூன் 13) அதிகாலை ஈரானை தாக்குவதை உறுதி செய்துள்ளது. ஈரான் மீது திடீரென இஸ்ரேலிய விமானப்படைகள், 6 இராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இஸ்ரேல், ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து தாக்குவது தான் இந்த நடவடிக்கையாக இருக்கும். ஈரானின் […]
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைமை தளபதிகள் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சி, வரும் 14-ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட. பாகிஸ்தானின் சீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வி என […]
லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் […]
நோஜென்ட் : பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிரான்சே இந்த திசையில் கடுமையான சட்டங்களை இயற்றும் என்று அவர் கூறினார். கிழக்கு பிரான்சின் நோஜென்ட் நகரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது […]
வாஷிங்டன் : அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். […]
லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் […]