”கனிமங்கள் எங்களுக்கு, விசா உங்களுக்கு”.., அமெரிக்கா – சீனா இடையே உறுதியான வர்த்தக ஒப்பந்தம்.!

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவிற்கு காந்தங்கள், அரிதான பூமித் தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துளளார்.

america china

லண்டன் : லண்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் இறுதி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ”இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான கனிமங்கள், சீன மாணவர்களின் கல்விப் பரிமாற்றம் மற்றும் வரி விதிப்புகள் ஆகியவை அடங்கும்.

புதிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா சீன இறக்குமதிகளுக்கு 55% வரிகளை விதிக்கவுள்ளது.  அதே நேரத்தில், சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 10% மட்டுமே வரியாக விதிக்கும். மேலும், அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் சீன மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அமெரிக்க அதிபர் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக கூடுதலாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது, இது மூன்று இலக்கங்களாக உயர்ந்துள்ள கடுமையான பதிலடி வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது”என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்