அரசியல்

தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடுங்கள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த […]

KARNADAKA 2 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தல் : 7 வேட்பு மனுக்கள் ஏற்பு, 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.அதில் , 7 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது . 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது .திமுக கூட்டணி வேட்பாளர் வேட்பாளர் வைகோ,திமுக வேட்பாளர்களான சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ,அதிமுக கூட்டணி வேட்பாளரான அன்புமணி,அதிமுக வேட்பாளர்கள் சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது .சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

#Politics 2 Min Read
Default Image

முகிலனுக்கு நெஞ்சுவலி! சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுகிறார்!

சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போன முகிலன் திருப்பதி போலிஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றமும் சுமத்தப்பட்டிருந்ததாலும், இவரை காணவில்லை என சிபிசிஐடி தேடிவந்தாலும் இவர் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் இன்று விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள், சர்க்கரை நோய் மற்றும் சில உளவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆதலால், தற்போது […]

#Chennai 2 Min Read
Default Image

வைகோ மீதான அவதூறு வழக்கு : 15ம் தேதி ஆஜராக  உத்தரவு

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதனால்  வைகோ இன்று ஆஜரானார்.வழக்கில் வைகோ மீண்டும் 15ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.  

#Politics 1 Min Read
Default Image

எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை மனு-சித்தராமையா

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில்தான் காங்கிரஸ், மத சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த ஓராண்டு […]

#Congress 3 Min Read
Default Image

பிற்படுத்தப்பட்டோர்க்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படும்! – ஓபிஎஸ்!

முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நேற்று தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து இன்று சட்டசபையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படும் என தெரிவித்தார்.

#ADMK 2 Min Read
Default Image

வைகோவின் மாநிலங்களவை வேட்புமனு ஏற்கப்பட்டது!

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது.கடந்த வாரம்  வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டது . இந்நிலையில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில்  வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.வைகோவின்  வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற  நிலையில் இருந்தது. தற்போது வைகோவின்  வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.தேர்தல்  ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,வைகோவின் மனுவை நிராகரிக்க […]

#DMK 2 Min Read
Default Image

பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.இந்த பரிசு பொருள் வழக்கில் விசாரணையை சிபி ஐ  காலதாமதமாக வழக்கை கையாண்டதால்  இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 23 ஆண்டுகளாக  நடந்து வந்த இந்த  வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து வழக்கை நடத்த விருப்பமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா , அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஏற்கனேவே […]

#ADMK 2 Min Read
Default Image

கர்நாடகா காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக்களை ஏற்க மறுத்த சபாநாயகர்!

கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 13  பேர் திடீரென தங்களது ராஜினாமாவை அளித்தனர். இந்த ராஜினாமாவை கடிதம் மூலம் சபாநாயகருக்கு தெரிவித்தனர். இதனை ஆராய்ந்த சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்க மறுத்து விட்டார். ராஜினாமா செய்த சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து விசாரித்த பின்னரே முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.

#Politics 2 Min Read
Default Image

வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை-டி.ஆர்.பாலு

மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்போழுது அவர் பேசுகையில்,வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர். பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று  டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டினார் வாஜ்பாய்.பெட்ரோல் – டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.

#Politics 2 Min Read
Default Image

பாஜகவில் இணைந்த தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் , பாடகி சப்னா சவுத்ரி !

நாடு முழுவதும் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் கடந்த 06-ம் தேதி இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் முறைப்படி உறுப்பினராக சேர்ந்து கொண்டார். அஞ்சு ஜார்ஜ்க்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா உறுப்பினர் அட்டையை கொடுத்தார். கேரளா மாநிலத்தை சார்ந்த அஞ்சு ஜார்ஜ் கடந்த 2003-ம் ஆண்டு பாரீசில்  […]

#BJP 3 Min Read
Default Image

எம்.எல்.ஏ க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியில் ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் ரூபாயாம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை […]

#Congress 3 Min Read
Default Image

இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது-கமல்ஹாசன்

நேற்று 10% இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது. இட ஒதுக்கீடு என்ற கனவு முழுமையாக பலிக்காத நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

#ADMK 2 Min Read
Default Image

பிரதமர் மோடிக்கு ஆல்பத்தை அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி !

குஜராத் மாநிலத்தில் புகழ் பெற்ற  நாட்டுப்புற பாடகி கீதா ராபரி.இவர் பாடிய அனைத்து ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்நிலையில் பாடகி கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். கீதா ராபரி இன்று மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது பேசிய கீதா ராபரி   தன் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருத்தினராக மோடி கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் தான் பாடிய பாடலை பாராட்டி ரூ. 250 கொடுத்து […]

#BJP 3 Min Read
Default Image

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக கூட்டத்தில் முடிவு!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி […]

#BJP 2 Min Read
Default Image

நீட் மசோதா நிராகரிப்பு ஏன் ! – திமுக எம்.பி க்கள் இரு அவைகளிலும் வெளிநடப்பு!

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான இரு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று கேட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் திமுக எம்.பிக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். 25 மாதங்களில் ஆகியும் மசோதா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நீதி […]

#DMK 3 Min Read
Default Image

ஜெயலலிதா வாழ்ந்த “வேத இல்லம்” நினைவிடமாக ஆக்குவது அவசியமா…! நீதிமன்றம் கேள்வி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து வந்த இல்லமான வேதா இல்லத்தை மக்கள் வரிப் பணத்தில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் பெயரை நிலைக்கச் செய்ய பல வழிகள் இருக்கும் போது அவர் வாழ்ந்த இந்த இல்லம் மட்டும் ஏன் நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். கோடநாட்டில் நாட்டில் அவர் ஓய்வு எடுக்க செல்வார் என்பதால் அதையும் நினைவு இல்லமாக மாற்ற […]

#TNGovt 3 Min Read
Default Image

‘அணுக்கழிவு மையத்தை அமைக்காதே’! ரயிலை மறித்து முழங்கிய முகிலன்!

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்கள் அனுப்பப்பட்டன. இணையதளத்தில் முகிலன் எங்கே என்ற கேள்வி அதிகமாக ஒலித்தது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸ் அவரை பிடித்து செல்லுவது போலவும், அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என கோஷமிட்டு கொண்டே […]

#Politics 2 Min Read
Default Image

கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி  வெற்றி பெற்றார். இந்த நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  […]

#BJP 2 Min Read
Default Image

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன?! உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.இதனை ஜெ.தீபாவும், தீபக்கும் எதிர்த்தனர். இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து கூறுகையில், மக்களின் வரிப்பணத்தில் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற அவசியம் என்ன என்றும், அவரது புகழை பரப்ப பல்வேறு வழிகள் இருக்கும் போது இத்தனை கோடி செலவில் நினைவிடம் அமைப்பதில் ஆட்சேபனை தெரிவித்தது சென்னை உயர்நீதி மன்றம்.

#ADMK 2 Min Read
Default Image