அரசியல்

தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்காக மக்கள் நீதி மய்யதிற்கு அழைப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சார்பில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான காட்சிகள் பலவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து முதன் முதலாக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு […]

#ADMK 2 Min Read
Default Image

#Breaking News :கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில்  கர்நாடகாவில் ஏற்கனவே 13 எல்எல்ஏக்கள், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை […]

#Congress 2 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள்,அன்புமணி வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர் .அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அன்புமணியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ANBUMANI 1 Min Read
Default Image

மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது! ஓபிஎஸ் பதில்!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் கூறுகையில் மத்திய அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாமென்றால், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசை வலியுறித்தியாவது தீர்மானம் போடுங்கள் என குறிப்பிடபட்டது. தமிழக […]

m.k.stalin 2 Min Read
Default Image

பின்வாங்கிய தினகரன் !வேலூர் மக்களவையில் அமமுக போட்டியிட போவதில்லை-தினகரன் அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

#AMMK 4 Min Read
Default Image

மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்! வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற வில்லை. தற்போது மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பிரதான காட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர் போட்டியிட உள்ளார். என்பதை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

#Politics 2 Min Read
Default Image

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு! வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் !

தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த வழக்கை மிலானி என்பவர் […]

#ADMK 2 Min Read
Default Image

வைகோ வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு ! திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு […]

#DMK 3 Min Read
Default Image

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது-வைகோ

தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கும்  திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி  கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை பின்னர் போக்குவரத்து கழகம் கனிமொழி கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தது.அதில் அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட பேருந்து என்றும் அது நீக்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது […]

#Vaiko 2 Min Read
Default Image

கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை- ஏ.சி.சண்முகம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ரத்து செய்யப்பட்ட  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே வேலூரில்  ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை .கதிர் ஆனந்துக்கு மக்கள் சரியான  பாடம் புகட்டுவார்கள் என்றும் […]

#ADMK 2 Min Read
Default Image

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்க இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .விரைவில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் அதிமுகவில் இணைய உள்ளார் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

தமிழக அரசை குறை கூறுவது காங்கிரசின் நோக்கமல்ல-கே.எஸ்.அழகிரி

சென்னையில் ஏற்பட்ட கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தமிழக அரசை குறை கூறுவது காங்கிரசின் நோக்கமல்ல .குறித்த நேரத்தில் அரசு செய்ய வேண்டியதை செய்யாததே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் .ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை காலம் தாழ்த்தி செய்கிறார்கள் என்று  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

#Chennai 2 Min Read
Default Image

அரசு செலவில் 15,000 ஏழை பெண்களுக்கு திருமணம் ! ரூ .51,000 உதவித்தொகை – உ .பி  முதல்வர்

உ .பி  முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணத்திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.35,000 கொடுக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு அதிகமான பெண்களுக்கு அரசு செலவில் திருமண நடத்தி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.அடுத்த ஆண்டு மணப்பெண்களுக்கு திருமண  உதவித் தொகையாக ரூ.51,000 கொடுக்க உ.பி மாநில சமூக நலத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது […]

#Politics 3 Min Read
Default Image

ஜூலை 9ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்!கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ! சித்தராமையா எச்சரிக்கை

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  சித்தராமையா  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,  கர்நாடக காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்றும்  கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா […]

#Congress 2 Min Read
Default Image

மாநிலங்களவை தேர்தல் : அன்புமணி ராமதாஸ் இன்று வேட்பு மனு தாக்கல்

பாமக மாநிலங்களவை வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று   வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அதிமுக கூட்டணியில் தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கப்பட்டது. இதனால் பாமக சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக  அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.இதனையடுத்து  அன்புமணி ராமதாஸ் […]

#ADMK 2 Min Read
Default Image

பேருந்துகள் வழியே இந்தியை திணிக்கும் அதிமுக அரசு – கனிமொழி கடும் கண்டனம்!

தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவு ஒன்று இட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு புறம் இருக்க, நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் […]

#DMK 2 Min Read
Default Image

நீட் தேர்வால் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது – விஜயகாந்த் கருத்து

நீட் தேர்வின் மூலம் சாதாரண ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்கும் நிலை உருவாக்கி இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக பாராமல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த தமிழக மாணவர் மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜயகாந்த் தமிழக மாணவர்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி அளித்திருந்தால் அவர்கள் நீட் தேர்வில் அதிகம் […]

#DMDK 2 Min Read
Default Image

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகும் நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை […]

#Congress 2 Min Read
Default Image

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது-கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது .ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை. 3 ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிப்பதில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி வருகிறது .தமிழகத்தில் உள்ள எந்த […]

#BJP 2 Min Read
Default Image

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை-எடியூரப்பா

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். மொத்தம் 11 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பொறுத்திருந்து […]

#Congress 2 Min Read
Default Image