#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு?

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில், அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் சபாநாயகர் நடத்தவில்லை.
கர்நாடகா சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025