வைகோ ஒரு பச்சோந்தி அவர் எதிரி யார் பாஜகவா ? இல்லை காங்கிரசா ? -கே.எஸ் .அழகிரி

Default Image

அரசியல் நாகரீகமற்றவர் வைகோ என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார் கே.எஸ் .அழகிரி காட்டம் 

ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் மற்றும்  லடாக் ஆகியவை  இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அமித்ஷா அறிவித்தார்.

இதனிடையே மாநிலங்கவையில் கடும் அமளி ஏற்ப்பட்டது அப்பொழுது வைகோ கடும் ஆட்சேபம் , தெரிவித்து பேச முற்ப்பட்டார் அப்பொழுது அமித்ஷா குறுக்கிட்டு வைக்கோவை பேச அனுமதிக்குமாறு தெரிவித்தார் .அப்பொழுது பேசிய அவர் காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கடுமையாக சாடினார் .

அதன் வெளிப்பாடாக தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பது .வைகோவின் பேச்சு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது இப்படி பேசுவதற்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றும்.நீண்ட நெடிய நாடுளுமன்ற அனுபவமுள்ள வைகோ இப்படி பேசுவது அவர் நிதானத்தையும் ,பக்குவத்தையும் இழந்திருப்பதை காட்டுகிறது .

வைகோ மாநிலங்களவை உறுப்பினாராக தேர்வான பின்னர் சுப்ரமணியசாமி ,மோடி மற்ற பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு மன்மோகன்சிங்கை சந்தித்தார் என குறிப்பிட்டுள்ள கேஎஸ்.அழகிரி இதன் மூலம் வைகோ அரசியல் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி என்று குறிப்பிட்டுள்ளார் .மேலும் அவர் 18 ஆண்டுகள் மாநிலங்கவையில் உறுப்பினாராக்கி அழகு பார்த்த திமுக ககாவுக்கு பச்சை துரோகம் செய்தவர் வைகோ என கடுமையாக சாடியுள்ளார் .

உலகின் அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு நேரு இணைத்ததைதான் துரோகம் என்கிறாரா ? வைகோ என்றும் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று  கூறும் வைகோ என்ன துரோகம் என்று கூறினால் விளக்கம் தர தயாராக உள்ளோம்.அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் வைகோ காஷ்மீர்  மாநிலத்தின் சுயாட்சியை பறிக்கும் பாஜகவிற்கு துணை போகலாம் என்று காட்டமான கேள்விகளை வைத்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war