சினிமா பாணியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு! காணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கு

காணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி பொதுநல வழக்கு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கில், காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசு மீது குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ,செப்டம்பர் 26-க்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு படம் ஒன்றில் என் கிணத்தை காணும் என்று புகார் அளிக்கும் பாணி நாம் அனைவரும் அறிந்ததே .தற்போது இதே பாணியில் 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025