தேசிய மொழியாக ஹிந்தி ஏன் இருக்க கூடாது?! – நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கேள்வி!

நேற்று முன்தினம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘ இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், ஹிந்தி மொழியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும். என்பது போல குறிப்பிட்டு பேசியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு தமிழகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ஹிந்தி நம்மை ஒற்றுமை படுத்துகிறது. தற்போது பலரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள ஹிந்தியை கற்று வருகின்றனர். மேலும், நமது நாட்டில் அனைவருக்குமான தேசியக் கொடி, தேசிய மலர், தேசியபறவை இருப்பது போல ஹிந்தி மொழி ஏன் தேசிய மொழியாக இருக்க கூடாது? என கேள்வி கேட்டிருந்தார் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025