தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மகன்..!

- தந்தை இறந்ததால் மனமுடைந்த மகன், கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை .
- தனது அறையில் யாரும் இல்லாதபோது, கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்தார். அப்பொழுது உயிர் போகாததால், அங்கிருந்த கயிறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர், மோகன். இவரின் மகன் பொன்ராஜ், மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தற்பொழுது கல்லூரிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் காணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்கள்.
இவர்களையும் தொடர்ந்து, பொன்ராஜும் ஊருக்கு கிளம்ப முயன்ற பொது அவரின் உறவினர் ஒருவர், அவனின் அப்பா மோகன் மாரடைப்பால் காலமானார் என கூறினார். இதை கேட்டு மனமுடைந்த பொன்ராஜ் சக மாணவர்கள் புறப்பட, அவர் தனது அறையில் கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
அதனால் உயிர் போகாததால், அங்கிருந்த கயிறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025