காதலி தொல்லை தாங்க முடியாமல் வேண்டுமென்றே ஸ்பீக்கரை திருடி போலீசில் மாட்டிக்கொண்ட காதலன் !

Default Image
  • சீனாவை சேர்ந்த இளைஞர் சென் இவரது  காதலித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார்.
  • ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சென் அருகிலிருந்த ஸ்டுடியோவில் சென்று வேண்டுமென்றே ஸ்பீக்கரை திருடி போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.

சீனாவை சேர்ந்த இளைஞர் சென். இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் சென்னிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் அப்பெண் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சென் அருகிலிருந்த டான்ஸ் ஸ்டுடியோவுக்கு சென்று அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடி உள்ளார். ஸ்பீக்கரை திருடியதற்காக  அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சென்  கூறுகையில் , தன் காதலியிடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் ஸ்பீக்கர் திருடியதாகவும் ,  போலீஸார் நிச்சயம் என்னை கைது செய்து விடுவார்கள் என எனக்கு தெரியும். காதலியிடம் இருந்து தப்பிக்க இப்படி செய்ததால் சென் காதலி அவரை விட்டு பிரிந்து விட்டாரா என தெரியவில்லை சென்னின் கதை சமூக வலைத்தளங்களில் பரவ இப்படி ஒரு  கதையை இதுவரை கேட்டது இல்லை என பலர் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai