புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.!

இந்தியாவில் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த 4 மாதத்திற்கான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியுள்ளது. எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025