தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 955,136 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,578 ஆகவும் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 203,011 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்,தற்போது இந்தியாவில் வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 144 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக திரும்பிய 1103 பேரில் 264 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது என தெரிவித்தார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு 4,070 பேர் வீடு திருப்பியுள்ளனர் என்றும் 86,342 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025