இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு அனுமதி கிடையாது

கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் காய்கறி வாங்க வருபவர்களுக்கு காலை 4 மணி – 7.30 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த நேர முறை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கிடையாது என்றும் கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே காய்கனி வாங்க அறிவுறுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025