சத்தீஸ்கர் அரசு புதிய முயற்சி… மது வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்…

Default Image

இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை  தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் இந்த ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. தளர்வு செய்யப்பட்டதால் மதுக்கடைகளின் முன் மது பிரியர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி இந்த கூட்டத்தின் மூலம் தகர்க்கப்படுவதை அறிந்த சத்தீஸ்கர் அரசு  ‘குடி’ மகன்களின் வசதிக்காக  புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது. இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து பதிவு செய்தால் வரும் OTP  ஒருமுறை கடவுச்சொல்  மூலம் இணையதளத்திற்குள் சென்று தேவையான மதுபானங்களை ஆடர் செய்தால் உடன் வீட்டிற்கே நேரில் சென்று விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விநியோகிப்பதற்கு சேவை கட்டணமாக ரூ. 120 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir