உலகம் முழுவதும் கொரோனா பதித்தவர்கள் & உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!

உலகம் முழுவதும் தற்பொழுது வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,526,905 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303,405 ஆகவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,704,268 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். குணமாகியவர்களில் சிலருக்கும் மீண்டும் தொற்று ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.
மேலும், நேற்று ஒரே நாளில் 96,334 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,317 பேர் உயிரிழந்துள்ளனர்.
முந்தைய நாட்களை கணக்கிடுகையில் வர வர கொரோனாவின் தாக்கமும், உயிரிழப்பும் பண் மடங்காக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எனவே, நாம் தனித்திருப்போம், விழித்திருப்போம்”.