வங்கக்கடலில் ஆம்பன் புயல்.! தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு.!

Default Image

ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியானது வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த ஆம்பன் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 20 ஆம் தேதியன்று மேற்கு வங்கம், வங்கதேசம் பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மத்திய மேற்கு, மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க வரும் 18ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies