மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உடல்நலக்குறைவால் காலமானார்.!

மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் இன்று காலமானார்.
மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராஜன் அவர்கள் இன்று கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் காலமானார். 73 வயதான அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார்.
இவர் மார்க்சிஸ்ட் காட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலில் திருச்சி வட்டக்குழு செயலாளராக பணியாற்றினார்.அதன் பின்னர் தான் மாநில செயற்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றினார்.
இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்துள்ளார். அதன் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பணியை மேற்கொண்டுள்ளார். அதே விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தோழர் கே.வரதராஜன் தத்துவ தரிசனம் என்கிற நூலையும், கிராமப்புற விவசாய இயக்கம் தொடர்பான பல சிறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் கே.வரதராஜனின் நல்லடக்கம் நாளை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025