குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம் இரண்டு மாதங்களில் பிறகு முதல் முறையாக 6% க்கும் குறைவு.!

குஜராத்தில் குணமானவர்களின் விகிதம் 73% மற்றும் இறந்தவர்களின் விகிதம் 6% ஆகவும் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் நேற்று கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 30,095 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 30,000 வழக்குகளைத் தாண்டி இந்தியாவில் நான்காவது இடத்தில் குஜராத் உள்ளதாம். மொத்த குணமானவர்களின் எண்ணிக்கை 22,030ஆகவும் உள்ளது. இதுவரை 1,771 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துமனையில் 6,294 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு குஜராத் இப்போது இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. குஜராத்தில் குணமானவர்களின் விகிதம் 73% மற்றும் இறந்தவர்களின் விகிதம் 6% உள்ளனர். இதுவரை கொரோனா தொற்றுக்களின் விகிதம் 21% ஆகவும் உள்ளது.