இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் ! முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025