#BREAKING: மருத்துவ இடஒதுக்கீடு 27-ம் தேதி தீர்ப்பு – உயர்நீதிமன்றம் .!

மருத்துவ இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை ஜூலை 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை எனவும் இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. இதனால், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழக கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கை வருகின்ற ஜூலை 27-ஆம் தேதிக்கு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025