பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க 44 மூத்த அதிகாரிகள் அடங்கிய புதிய குழு.!

பயங்கரவாதிகள் இந்தியா வருவதை தடுக்கவும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் 44 மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் மூத்த அரசு அதிகாரிகள் 44 பேர் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. UAPA இன் 1967 சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு 51A-யின் படி, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது, தனிநபர் அல்லது ஒரு குழுவானது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வருகையை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்க உள்ளது.
மேலும், இந்த குழு மூலம், பயங்கரவாதத்தில் ஈடுபடும் அல்லது இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு ஆதரவளிக்கும் எவரேனும் வைத்திருக்கும் நிதி மற்றும் அவர்களது சொத்துக்களை சட்ட அமலாக்க துறையினர் உதவியுடன் கைப்பற்ற இந்த 44 அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025