சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜை தொடங்கியது.!

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது.
இன்று காலை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை தொடங்கியது. பின் காலை 10 மணிக்கு நடை மூடப்படும். பின்னர், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு நடை மூடப்படும்.
கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை, சபரிமலையில் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஷ் மோகனரின் ஒரு ஆண்டு பதவிகாலம் நிறைவு பெற்றதால், புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025