SPB-யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

எஸ்பிபிக்கு உடல்நிலை சீராகவுள்ளது என்றும் அவரை எங்களுடைய மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
கடந்த 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்பிபிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது எஸ்பிபியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய உடல்நிலை சீராகவுள்ளது என்றும் அவரை எங்களுடைய மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.