சுப்ரீம் கோர்ட் உத்தரவு – கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது.!

கடன் தவணைகளை செலுத்தாதவர்களின் கணக்கை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை ஆகஸ்ட் 31 வரை கடன் தவணைகளை செலுத்தாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட அவகாசத்தை நீட்டிக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமக்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை மாா்ச் முதல் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன், தொழில் கடன், கிரெடிட் காா்டு கடன் என பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வந்தவா்கள் பயனடைந்தனா். எனினும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிக்கப்படவில்லை. இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், அதற்கான உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.