“திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை” – டி.கே.எஸ். இளங்கோவன்

Default Image

திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

 பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம். இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,கூட்டணிகள் மாறும், அது எப்படி மாறும் என்பது உள்ளது அல்லவா. காங்கிரசும் – பாஜகவும் கூட்டணி வைத்து சந்திக்குமா?  என்று கேள்வி எழுப்பினார் .தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் திமுக கூட்டணியில் வரலாம்.மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அதனால் திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam