தளர்வுகளை தள்ளிவைத்துவிட்டு தாங்களாக முன்வந்து ஊரடங்கு கடைபிடிக்கும் மக்கள்!

தளர்வுகளை தள்ளிவைத்துவிட்டு தாங்களாக முன்வந்து ஊரடங்கு கடைபிடிக்கும் வாழப்பாடி மக்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சில நாட்களாக அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகம் இருப்பதால் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பொதுமக்கள் தளர்வுகளை தள்ளிவைத்துவிட்டு தற்பொழுது தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். வருகின்ற ஏழு நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணியில் பொதுமக்களே களமிறங்கி செயல்பட உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025