பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி தான்.. வசூலில் மாஸ் காட்டிய மாஸ்டர்….!

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திருநெல்வேலி மற்றும் கண்ணியாகுமாரி ஆகிய 2 மாவட்டங்களில் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உலகளவில் தற்போது வரை இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, இந்த திரைப்படம் திருநெல்வேலி மற்றும் கண்ணியாகுமாரி ஆகிய 2 மாவட்டங்களில் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025