சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் பாண்டியன் கைது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதால், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகிலிருந்த கட்டிடங்களுக்கு தீ பரவி 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன.
இந்த வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே, பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக போர்மேன் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025