சிங்கம் பட இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி.!!

இயக்குனர் ஹரி கடும் காய்ச்சல் காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இந்த படத்தை தொடர்ந்து சாமி, சிங்கம், வேல், ஆறு, வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனியில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படத்திற்கான படப்பிடிப்பு நெய்க்காரப்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இயக்குனர் ஹரிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஹரியுடன் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025