தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்…! பின்னணி என்ன..?

தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்.
சென்னை, நெற்குன்றம் சத்தியநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பிரம்மதேவன் என்பவரின் மகன், நாராயணன் (23). இவர் திண்டிவனத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அண்மையில் சென்னை வந்தார்.
நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சாலையோரமாக நடந்து வந்துந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், சாலையில் நடந்து வந்த நாராயணனை சரமாரியாக விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில், நாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025