மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தடை.., ஸ்டாலின் எதிர்ப்பு..!

அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவிதத்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளித்த புகாரின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் மம்தா பானர்ஜிக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு சார்பின்மை, நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நியாயமான, நேர்மையான தேர்தல்களில் தான் நிலைகொண்டுள்ளது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025