அஸ்வினுக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தது தவறு தான் – ரிக்கி பாண்டிங்..!!

அஸ்வினுக்கு கடைசி ஓவர் கொடுக்காதது தவறு என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன் தினம் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தோல்வி குறித்து கூறுகையில் ” எங்கள் அணியில் இறுதி ஓவர்களில் டாம் கரண் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் எளிதான பந்துகளை கொடுத்துவிட்டார்கள். இது எதிர் அணிக்கு சாதகமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்கள் எடுக்கவில்லை என்றாலும் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். போட்டியில் மிகவும் சிறப்பாக அஸ்வின் பந்து வீசினார். அவருக்கு கடைசி ஓவர் கொடுக்காதது தவறு தான். ஒரு பவுண்டரி கூட அவர் கொடுக்கவில்லை அவருக்கு எனது பாராட்டு ” என்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025