சென்னை – பெங்களூர் அணிகள் மோதல்..!! முதல் இடத்தை தட்டி பறிக்குமா CSK..??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் மோதியதில் 16 முறை சென்னை அணியும், 9 முறை பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2 வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகள் விளையாடி 4 போட்டியிலும் வெற்றி வெற்றி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் அதுபோல் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் உள்ளார்கள்.