மாநிலங்களின் கையிருப்பில் 38 லட்சம் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 38 லட்சம் தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 58,31,73,780 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 56,29,35,938 தடுப்பூசிகளை மாநிலங்கள் பயன்படுத்திவிட்டது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 38,00,030 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 81,10,780 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 56.64 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025