முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூர் செல்கிறார்.!

முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா நடக்கிறது. இதற்காக முதலமைச்சர் கோவையில் இருந்து கார் மூலமாக நாளை மாலை திருப்பூர் வருகிறார். அதேபோல நாளை காலை 11 மணிக்கு கோவையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025