அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வாழ்த்துக்கள் – எல்.முருகன்!

அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வாழ்த்துக்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களும் தன் பக்கத்தில் ட்விட்டர் பக்கத்தில் மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழும் அமுதும் போல், கடலும் அலையும் போல், மீனவர் நலனையும், மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம். இந்நாளில் அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு என் இனிய மீனவ தின வாழ்த்துக்கள்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
நவம்பர் -21 #உலகமீனவர்தினம்.!!
தமிழும் அமுதும் போல்!! கடலும் அலையும் போல்!! மீனவர் நலனையும்,மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம்!!இந்நாளில் அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு என் இனிய மீனவ தின வாழ்த்துக்கள்.!!#WorldFisheriesDay pic.twitter.com/eB1CxQ1Mub— Dr.L.Murugan (@Murugan_MoS) November 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025