ஜெயலலிதா வீம்புக்கு தான் இதை செய்தார்…! – கி.வீரமணி

தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார்.
திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருப்பது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இனியும் அண்ணாவிற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார். ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போதும் அதிமுக செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025