அஜித்–ஷாலினி ரொமான்டிக் க்ளிக்.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான சிறந்த தம்பதிகள் என்றால் அஜித்–ஷாலினி என்று கூறலாம். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
இந்நிலையில் நேற்று 23 வது ஆண்டு திருமண நிறைவு விழாவை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர். அப்போது அஜித் ஷாலினியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாம்லி வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025