கோவையில் அதிமுக கவுன்சிலரை தள்ளிவிட்டதால் பரபரப்பு!

கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து வரி மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும்போது பிரபாகரனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் பிரபாகரனை தள்ளிவிட்டதால், அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், சொத்து வரி உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025