ஒரு மனிதனின் மோசமான பக்கத்தை விக்ரம் படத்தில் காட்டியிருப்பேன்- விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களும் நடித்து கலக்கி வரும் விஜய் சேதுபதி இந்த விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி “மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. அதேபோல தான் விக்ரம் படத்திலும் என்னுடைய நடிப்பும் இருக்கும், ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025