பஞ்சாப்பை பதம் பார்த்த லக்னோ..’ஐபிஎல்’ வரலாற்றில் மிரட்டல் சாதனை.!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மொஹாலியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லக்னோ அணியின் வீரர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.
257 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது அணி என்ற சாதனையை லக்னோ அணி படைத்தது. இதற்கு முன்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்திருந்தது. அதற்கு அடுத்த படியாக கடந்த 2016-ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுர் அணி 248 ரன்கள் எடுத்திருந்தது.
தற்போது நேற்று நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 257 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் நடப்பு தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும் லக்னோ படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.