அயோத்தி கோயில்.! ராமர் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார்.! கர்நாடகாவில் அமித்ஷா பேச்சு.!

Amit Shah

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார் என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு. 

கர்நாடகாவில்  சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் (மே 10) வரவுள்ள நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் இதற்கு முன்னர் செய்த பணிகள், செய்ய போகும் வாக்குறுதிகள், பிற கட்சியினர் மீதான விமர்சனங்கள் என பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

இன்று, கர்நாடக மாநிலம் பெலகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்கையில் , கர்நாடக விவசாயிகளுக்காக பாஜக கடுமையாக உழைத்துள்ளது என குறிப்பிட்டார். மேலும்,  விவசாயிகளுக்கு பல சலுகைகளை பாஜக அரசு சார்பில் வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டார் .

அடுத்து, காங்கிரஸ் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்தது. ஆனால் பாஜக மராட்டியர்களுக்கு உரிய மரியாதை செய்தது என குறிப்பிட்ட அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார் என கர்நாடகாவின் பெலகாவியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பிரச்சாரத்தின் போது கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்