கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…இன்றைய விலை நிலவரம் இதோ.!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.45,736க்கும் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல, 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 4,683 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.37,464 ஆகவும் விற்பனை.
மேலும், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,500 எனவும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.