இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ்.! முதலிடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்.!

AAP

ஜலந்தர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் 2ஆம் இடத்தில் உள்ளது. 

கடந்த ஜனவரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில ஜலந்தர் மக்களவை தொகுதி எம்பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த மக்களவை தொகுதிக்கு கடந்த மே 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்தோக் சிங் சவுத்ரி மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரி நிறுத்தப்பட்டார். மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி சார்பில் சுஷில் ரிங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் ரிங்கு முதலிடம் பிடித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் பாஜக வேட்பாளர் இருக்கிறார். இன்னும் இறுதி நிலவரம் வெளியாகவில்லை.

மறுபுறம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெருபான்மை பலத்துடன் முன்னேறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்