Coromandel express accident live: நாளை ஒடிசா செல்கிறார் மன்சுக் மாண்டவியா..!

TrainCrash

மன்சுக் மாண்டவியா வருகை:

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை புவனேஸ்வர் எய்ம்ஸ் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு வருகை தருகிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் இறக்கவில்லை – ஒடிசா சென்ற ஐஏஎஸ் அதிகாரி தகவல்.

3.6.2023 7:05 PM

விரிவான விசாரணை நடத்தப்படும்:

இந்த விபத்து சம்பவம் நெஞ்சையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழங்க ஒன்றிய அரசு உதவும், இந்த ரயில் விபத்து மிகவும் தீவிரமான ஒன்று. இதற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய அனைத்து வித கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3.6.2023 5:30 PM

மல்லிகார்ஜுன் கார்கே அறிக்கை:

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து காரணமாக தேசிய அளவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், முடிந்த மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முழு காங்கிரஸ் கட்சியினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் உள்ளன. அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

Kharge statement
Kharge statement

3.6.2023 4:00 PM

டி.கே.சிவக்குமார் கோரிக்கை:

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஒடிசா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

3.6.2023 1:40 PM

இறப்பு எண்ணிக்கை:

இதுவரை கிடைத்த தகவலின்படி, ஒடிசா ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

3.6.2023 1:12 PM

மீட்பு பணி நிறைவு:

மீட்பு பணி முடிந்து சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

3.6.2023 12:30 PM

ரயில்கள் ரத்து:

பாலசோர், சோரோ மற்றும் பஹானாகா பஜார் ஆகிய மூன்று இடங்களில் இதற்கான கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 48 ரயில்கள் ரத்து, 39 மாற்றுப்பாதை மற்றும் 10 குறுகிய கால நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியீட்டு ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.

3.6.2023 11:45 AM

ஒடிசா செல்கிறார் மோடி :

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா செல்கிறார். முதலில், பாலசோரில் விபத்து நடந்த இடத்தை அவர் பார்வையிடுவார், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3.6.2023 11:15 AM

இறப்பு எண்ணிக்கை:

ஒடிசா ரயில் விபத்த்தில் இறப்பு எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது மற்றும் சுமார் 650 பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

3.6.2023 10:50 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்