நடுக்கடலில் பழுதாகி நின்ற தமிழக படகு.! 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.! 

Boat Arrest

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 600 விசைப்படகுகளுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று நள்ளிரவு அனைவரும் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, அந்தோணிசாமி என்பவருடைய படகு நெடுந்தீவு அருகே பழுதாக நின்றதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த படகையும் படகில் இருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ளனர். படகு உரிமையாளர் அந்தோணிசாமி ராமேஸ்வரம் கடற்படை அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். தனது படகு இலங்கையில் அருகே பழுதாகி நின்றதாகவும் அதனை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதாகவும் புகார் அளித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்ட 9 மீனவர்களிடம் நெடுந்தீவில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்