OTT-ல் வெளியாகிறது ‘மாமன்னன்’ திரைப்படம்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

மாரி செல்வராஜ் இயக்கிய அரசியல் த்ரில்லர் திரைப்படமான ‘மாமன்னன்’ படம் ஜூலை 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
View this post on Instagram
ஜூன் 29 அன்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுது.

வைகைப்புயல் வடிவேலுவை இதுவரை இல்லாத ஒரு தீவிர கதாபாத்திரத்தில் காட்டி அவருக்கு எதிராக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்துள்ளதால் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

மாமன்னன்:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.