புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை.
புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுச்சேரியில் 10% வழங்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரி திமுகவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்த கல்வியாண்டில் இருந்தே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
